வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன?
- நாம் தேவனாகிய. கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம், நேசிக்கப்படுகிறோம் என்பதற்கான உறுதி
- பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை அனுபவித்தல்
- தேவனாகிய கர்த்தர் பேசுவதைக் கேட்பது
- நம்முடைய விதியை நிறைவேற்ற சுதந்திரமாக இருப்பதுநம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்து இருப்பது
… மேலும் பல!!
இந்த இணையதளத்தில், நம்முடைய வாழ்க்கையில் உள்ள சிரமங்களிலிருந்து நம்மை விடுவிக்கவும், நம்மை இயேசுவிடம். நெருங்கி வரச்செய்யவும் உதவும் போதனைகளும் பிரார்த்தனைகளும் உள்ளன.
வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வொர்க்-புக்
நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக இயேசு தம் உயிரைக் கொடுத்தார், கிறிஸ்து நமக்காக வாங்கிய விடுதலையை நம்மில் பலர் சுதந்தரிக்கத் தவறிவிட்டோம். நாம் இன்னும் விடுதலையாக இல்லாத நம் வாழ்வின் பகுதிகளை அடையாளம் காண இந்த வொர்க் புக்உதவுகிறது. விளக்கங்கள் மற்றும் மாதிரி பிரார்த்தனைகள் மூலம், நாம் இதுவரைக்கும் கற்றிராத மனந்திரும்புதல் மற்றும்மன்னிப்பு ஆகியவற்றிற்கான முக்கியமான சில சாவிகளை இது நமக்குக் கற்பிக்கிறது. பிரார்த்தனையுடன் செயல்படுவதன் மூலம், இந்த சாவிகளை நம் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தலாம், விடுவிக்கப்பட்டு, இயேசு நமக்காக விரும்பும் வாழ்க்கையை வாழ அதிகாரம் பெறலாம். பிறகு, மற்றவர்களையும் விடுவிக்க உதவும் வகையில் நாம் திறன்மேம்பட்டு இருப்போம்.
இங்கே பதிவிறக்கவும்: –
வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு தமிழ் வொர்க்-புக்
ஆங்கிலம், இந்தி, பெங்காலி, கன்னடம், லுகாண்டா, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த வலைத்தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்ய ‘விக்டோரியஸ் கிறிஸ்டியன் வாழ்வு’ என்னும் வொர்க்-புக் கிடைக்கிறது.
மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு
மனந்திரும்புதலும் மன்னிப்பும் தேவன் நமக்கு அளிக்கும் இரண்டு பரிசுகளாகும். அவை தேவனோடும், மற்றவர்களுடனும் சரியானவர்களாக இருக்க நமக்கு உதவுகின்றது, இது இயேசுவோடு ஒரு ஆழமான உறவுக்கு நம்மை இழுக்கிறது.
சிலர் தாங்கள் செய்த காரியங்களை அல்லது கடந்த காலங்களில் அவர்கள் அனுபவித்த, தங்களை அல்லது மற்றவர்களைக் காயப்படுத்திய சம்பவங்களை மறக்க மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ‘நேர்மறையான சிந்தனை‘ தங்களை சுதந்திரமாக இருக்க உதவும் என்றும் காரணம் கூறுகிறார்கள். ஆனால் இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் பாவத்தைக் கழுவ முடியாது என்று வேதாகமம் சொல்கிறது. மனந்திரும்புதல் அல்லது மன்னிப்புக்கான ஒரு குறிப்பிட்ட ஜெபத்தை நாம் ஜெபித்தவுடன், பாவம் தீர்க்கப்பட்டிருக்கும் (கழுவப்பட்டுவிட்டது), அதை இனி மறக்க முயற்சிக்க வேண்டியதில்லை.
மனந்திரும்புதல்
- பாவத்திலிருந்தும் நம்முடைய சுயநலப் பழக்கங்களிலிருந்தும் விலகி தேவனை நோக்கி திரும்புவது.
- மனந்திரும்ப வேண்டுமென்றால், நாம் செய்தவை பாவம் என்று முதலில் உணர வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நமக்காக இதைச் செய்வார, நாம் செய்தது தவறு என்று ஆழ்ந்த உணர்வாக இது வெளிப்படும்.
- நம்முடைய பாவத்தை உறுதிப்படுத்திய பிறகு, அதை தேவனிடம் அறிக்கை செய்வதின் மூலம் ஒப்புக்கொள்ளலாம், மேலும் நம்மை மன்னிக்கும்படி அவரிடம் கேட்கலாம். நாம் ஒப்புக்கொண்ட பாவத்தைக் குறிப்பிட்டு கூறி, நம் மீதும் மற்றவர்கள் மீதும் இருக்கக்கூடிய அதன் விளைவுகளையும் விவரித்து குறிப்பிடுவது முக்கியம். நாம் ஒப்புக்கொண்ட அந்த பாவங்களைச் செய்வதை நிறுத்த வேண்டும், அதாவது அவற்றைக் கைவிடுவது ஆகும். இதைச் செய்ய நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்கள் வாழ்க்கையில் சில சமயங்களில் மனந்திரும்ப வேண்டியது அவசியம். நாம் மனந்திரும்பியிருக்கிறோம் என்று நம்மில் பலர் நினைக்கலாம், ஆனால் நாம் உண்மையிலேயே மனந்திரும்பியிருந்தால், அந்த பழைய உலகப் பழக்கவழக்கங்கள் இனி நம்மைப் பின் தொடர்ந்து பிடிக்காது.
அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இயேசுவின் முதல் செய்தி மனந்திரும்புதலைப் பற்றியது (மாற்கு 1:15); அவர் மனந்திரும்புதலைப் பற்றிப் பேசினார், பூமியில் தான் செய்த ஊழியத்தின் மூலமாக மக்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழி நடத்தினார். வேதாகமத்தில் பதிவிடப்பட்டு உள்ள அவரது கடைசியாக செய்தியில் சபைகளுக்கு மனந்திரும்புதலின் செய்திகளும் அடங்கும் (வெளிப்படுத்துதல் 2 மற்றும் 3).
“ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கின்றார்...” 2 பேதுரு 3:9
மன்னிப்பு
மன்னிப்பு என்பது நமக்கு எதிராக பாவம் செய்த நபரை அவர்கள் நமக்குக் கொடுக்க வேண்டிய கடனிலிருந்து விடுவிப்பதாகும், எங்களை ‘மன்னிக்கவும்‘ என்று சொல்லும் கடனையும் கூட.
- மன்னிக்கமுடியாத தன்மை நம்மை பல வழிகளில் காயப்படுத்துகிறது; அது நம்மையே ‘இரையாக்கி’ நோய் மற்றும் உடல் வலியை கூட ஏற்படுத்தும்.
- மன்னிக்கமுடியாத தன்மை என்பது விஷம் குடித்து, அதினால், வேறு யாராவது பாதிக்கப்படுவார்கள் என்று நம்புவது போன்றது!
மத்தேயு 18: 21-35-ல் மன்னிக்க மனம் இல்லாத ஊழியரின் உவமையில், மன்னிப்பைப் பற்றி
மன்னிப்பு என்பது இயேசுவுக்கு ஒரு விலையுயர்ந்த விஷயம். அது அவருடைய ஜீவனை விலையாகக் கொண்டது. அவருடன் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்காக நம்முடைய பாவங்களுக்குக் கிரயம் செலுத்த அவர் மரித்தார். அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக, நமக்கு எதிராக பாவம் செய்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.
“இரத்தம் சிந்தாமல் பாவ மன்னிப்பு இல்லை.” எபிரெயர் 9:22
மன்னிப்பு குறித்த ஒரு சிறு வேதாகம தியானத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். இதை தனித்தனியாக அல்லது ஒரு சிறிய குழுவில்செய்யலாம். வேதாகம தியானத்தை பதிவிறக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: 👇
கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைகள் குறித்த பைபிள் படிப்பை நாங்கள் தயாரித்துள்ளோம். இதை தனித்தனியாகவோ அல்லது சிறிய குழுவாகவோ செய்யலாம் 👇
